Svr.pamini

Saturday, August 18, 2012

மண்ணில் ஒரு சொர்க்கம் கோடியக்கரை.

இன்று கலையிழந்து கற்பிழந்து  கிராமத்திற்கான அனைத்து அடையாளங்களையும் தின்று விட்ட நாகரீக மோகத்தினிடையே, பழமை மாறாமல், பல வரலாற்று சுவடுகளை தாங்கிய படி  கவர்ச்சியாய் வருவோரை வசீகரிக்கும் ஒரு அழகிய கிராமம். நான் பிறந்து வளர்ந்து,உப்பு காற்றில் உழன்று, புழுதி மழையில் நனைந்த அழகிய கிராமம் கோடியக்கரை.

ஆயிரம் ஆயிரம் சிறப்புக்கள்..அனைவரும் காணவேண்டிய கண்கொள்ளா அழகு.

இந்த கிராமம் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகில் உள்ளது. இந்திய வரைபடத்தில் பார்த்தோம் எனில் இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் கடல் பாக்ஜலசந்தி இந்த கிராமத்தில் தான் உள்ளது.இங்கிருந்து இலங்கை வெறும் இருபத்தைந்து கிலோ மீட்டர் தான்.

எப்பொழுதும் குளிந்த காற்று வீசக்கூடிய இந்த அழகிய கடற்க்கரை கிராமத்தின் தனி சிறப்பே. அங்குள்ள சதுப்பு நில காடுகள் தான்.

இங்கு ஆயிரக்கணக்கான புள்ளி மான்களும் வெளிமாங்களும் கூட்டங் கூட்டமாய் துள்ளி திரிவரை காணலாம்.
மயில்கள் அசைந்து அன்னநடை போடும் அழகை காணலாம். காலை மற்றும் மாலை நேரத்தில் குயில்களின் இனிய கானம் கேட்க்கலாம்.

இங்கு 17.26 சதுர கி.மீ பரப்பளவில்  1967ஆம் ஆண்டு கலைமான்களைக் காப்பதற்காக உருவாக்கிய வனஉயிரின உய்விடம் இங்குள்ளது.
இந்த காட்டில் பன்றிகள், நரிகள்,சில அரியவகை ஆமைகள். கோடிய விஷமுள்ள பாம்புகள்,முயல்கள்
தான் தோன்றி குதிரைகள்

(ஆங்கிலேயர்களால் வளர்க்கப்பட்டு பின்னர் விட்டுவிட பட்ட குதிரைகள் நாளடைவில் அடங்காமல் சுற்றி திரியும் தான் தோன்றி குதிரையாக மாறிவிட்டன)

இங்குள்ள காட்டில் 150 வகையான தாவரங்கள் உள்ளன பல அறிய வகை மூலிகைகளும் இங்குள்ளது  குறிப்பிடத்தக்கது.இங்குள்ள மூலிகைகளை பாதுகாக்க  வனத்துறை மூலிகை வனம் அமைத்து அதை பாதுகாத்து வருகின்றனர்.

அடுத்து இங்குள்ள பறவைகள் சரணாலயம்.





அக்டோபர் தொடங்கி மார்ச் மாதம் வரை ஆயிர கணக்கான வெளிநாட்டு பறவைகளை இங்கு காணலாம்.ஆண்டொன்றுக்கு இரண்டரைலட்சம் பூ நாரைகள் இங்கு தரை இறங்கும்.இந்த பறவைகள் பற்றி தனியாக ஒரு பதிவிடுகிறேன்.

இந்த கிராமம் தாங்கி நிற்கும் வரலாற்று சின்னங்கள் .

 .
2.004 சுனாமி அழித்தது போக எஞ்சி நிக்கும்  1000 ஆண்டுகள் பழைமையான சோழர் காலத்துக் கலங்கரை விளக்கம் ஒன்று சிதைந்த நிலையிற்பதை இன்றும் காணலாம்

ராமர் பாதம்


இங்கு உயர்ந்த மணல் மேடு ஒன்றில்  ராமருடைய திருப்பாதம் பதிக்க பட்ட ஆலயம் ஓன்று உள்ளது.( நான் ஏற்க்கனவே சொல்லியிருந்தேன் இங்கிருந்து இலங்கை வெறும் இருபத்தைந்து கிலோ மீட்டர்தான் என்று)சீதையை ராவணன் கடத்தி சென்ற பொழுது ராமர் இங்கிருந்து இலங்கையை பார்த்தாராம்,ராவண கோட்டையின் பின் புறம தெரிந்ததாம்.பின் புறம் செல்வது கோழை தனம் என்றெண்ணி  ராமேஸ்வரம் வழியாக சென்றதாக வரலாறு.


அடுத்து சிறப்பு மிக்க ஆலயம் ஓன்று ...



தேவர்களும் அசுரர்களும் பாற்க்கடலை கடைந்து கிடைத்த அமிர்தத்தை பருகிய பிறகு மீதமுள்ள பகுதியை வாயுதேவனிடம் கொடுத்தனர். அவர் அதை எடுத்துக் கொண்டு ஆகாய வழியாக செல்கையில் அசுரர்கள் வாயுவிடமிருந்து அமுத கலசத்தை கைப்பற்ற முனைந்தனர். வாயுதேவன் முருகனை மனதால் வணங்கி அமுத கலசத்தைக் கீழே போட, அதை முருகப்பெருமான் தன் கையில் ஏந்திக் கொண்டார். அமுத கலசத்தில் இருந்து ஒரு துளி அமிர்தம் தவறி பூமியில் கோடியக்கரை தலம் இருக்கும் இடத்தில் விழுந்து ஒரு லிங்கமாக மாறியது. அதனாலேயே இங்குள்ள மூலவருக்கு அமிர்தகடேசுவரர் என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் உள்ள பிரகாரத்தில் இருக்கும் கிணறு அமிர்த தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. வங்கக் கடலோரம் அமைந்துள்ள இத்தலம் ஒரு கோளிலித் தலமாகும். ஆகையால் இங்குள்ள நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்திருக்கின்றன.


இந்த ஆலயத்தை பற்றி மேலும் தகவல் அறிய இங்கே சொடுக்குங்கள்


 

பொன்னியின் செல்வன்  நூலில் கல்கி அவர்கள் எங்கள் கிராமத்தை சுவைபட விவரித்து இருக்கிறார்.அதை படிக்க இங்கே இங்கே சொடுக்குங்கள் .


 

இப்படி எங்கள் கிராமம் அனைவரும் காண வேண்டிய அழகிய சொர்க்கம். வாய்ப்பு கிடைப்போர் அவசியம் ஒருமுறை வந்து செல்லுங்கள் நாகப்பட்டினத்தில் இருந்து 57 கிலோ மீட்டர்தூரம். வரும் வழி எங்கும் வேளாங்கண்ணி, வேதாரண்யம் என்று அனேக சுற்றுலா தளங்கள் உள்ளன..



 

Saturday, May 26, 2012

எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

எதிரிநாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும் திறனுடைய ஆகாஷ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஆகாஷ் ஏவுகணை ஒரிசாவின் பலசோர் பகுதியை அடுத்த சந்திபூர் சோதனை தளத்தில் இருந்து ஏவபட்டது.

 வாகனத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை விண்ணில் நிறுவப்பட்டிருந்த மாதிரி விமானத்தை வெற்றிகரமாக தாக்கியதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 25 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்கை வீழ்த்தும் ஆகாஷ் ஏவுகணை, 60 கிலோ எடையுள்ள ஆயுதங்களை சுமந்துசெல்லும் திறன் கொண்டது.

மேலும் எதிரிநாட்டு விமானங்கள் இந்தியாவுக்குள் நுழைந்தால் ரேடாரின் உதவியுடன் உடனே தாக்கும் வகையில், இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்‌. இதே ஆகாஷ் ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் நேற்று முன்தினமும் சோதனை செய்தது.

Tuesday, April 17, 2012

நாம் இந்தியர்.

நம் நாட்டு அரசியலை , மாறிமாறி விமர்சிக்கும் நம் நண்பர்களே!நம்மை நாமே இழிவு படுத்தி கொள்ளாவிட்டால், வேலை இல்லாதவர் ஆகிவிடுவோம் என்ற கடைமைக்காகவே கடைமையை செய்யும் அன்பர்களே! உங்கள் கடைமை உணர்வுக்கு என் வாழ்த்துகள்.

இந்தியாவில் பிறந்தமையால் நீங்கள் இந்திய குடிமக்கள்,
ஆண்டுக்கொரு முறை அரசுக்கு வரி கொடுத்தமையால், எல்லாவற்றையும் விமர்சிக்க,குறைகூற உரிமம் பெற்று விட்டீர். ஆனால் சிந்திக்கவும் திறனற்று அடுத்தவர் வழிகாட்டலுக்கு ஆட்டு மந்தை ஆணீர்.குறை கூறவும், தவறை தட்டிகேட்கவும் உரிமை உண்டு. நீங்கள் தவறு செய்யா தவறாய் இருப்பின்.

அரசியல் வாதி மட்டும் தான் ஊழல் வாதியா? நாம் நம் கடைமையை சரியாக செய்கிறோமா? நாம் நம் தேவைக்கு லஞ்சம் கொடுக்கலாம், வாங்கவும் செய்யலாம் தவறில்லை ? நாம் தேவைக்கு ஊழலை ஊக்குவிக்கும் நாம் மற்றவரை விமர்சிக்க  தகுதி உள்ளவரா? 

தமிழ் நாட்டில் இரண்டு அரசியல் கட்சிகளும் மாறிமாறி இலவசங்களை
வழங்கி மக்களை சோம்பேறி யாக்கிய போதும், அந்த இலவசங்கள் உங்கள் வீட்டின் முன் வந்தபோதும் அதை புறக்கணித்தவர் எத்தனை பேர் ?எங்களுக்கு இலவசம் வேண்டாம் நிரந்தர வேலை வாய்ப்பை  கொடு என்று கேட்டவர் எத்தனை பேர்?

பஸ் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு என்று கூச்சலிட நமக்கு என்ன தகுதி இருக்கிறது ?


இன்று தமிழ் நாட்டில் வாக்காளரை விட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை  அதிகம். இதற்க்கு காரணம் நம்மில் பலர் காரணம் தெரியாமலேயே அரசியல் தலைவர்களின் கொள்கைக்கு சுவரொட்டியாக இருப்பதுதான்.

சாதி, இன உணர்வை தூண்டி அரசியல் நடத்தும் இவர்களின்  நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வதா? எங்களுக்கு பதவியாசையல்லாம் இல்லை தமிழ் இன மக்களுக்கு தொண்டு செய்வதுதான் எங்கள் நோக்கம் என்றால்..... அதற்க்கு அரசியல் கட்சி எதற்கு? கொள்கை,கூட்டணி கட்சி , தொகுதி பங்கீடு இவற்றை துறந்து மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடத்தலாமே?

தமிழனை ஏய்ப்பது யார் ? இவர்கள் கூற்றின் படி சீக்கியன் மட்டும்தானா? தமிழ் நாட்டில் தமிழனை இன்னொரு தமிழன் ஏய்க்க வில்லையா? இன்னொரு தமிழன் கொள்ளையிட வில்லையா? பிறகு எதற்கு உங்கள் துப்பு கேட்ட இனவெறி கொள்கை?

தமிழ் நாட்டில் சாதியை ஒழிப்பது யார்? அரசின் நலதிட்டத்தை பெற நாமே வருசையில் நின்று நான் தாழ்த்த பட்டவன் என்று  சான்றிதழ் கேட்க்கும் நம்மில் இன்னும் இருநூறு அம்பேத்கர் வந்தாலும் சாதி ஒழியாது.

தமிழனை இந்தியரிடம் இருந்து பிரிக்கும் படலம் இனியாவது ஒழியட்டும்.
மனித நேயம் கொண்டு தமிழனாய் மனிதனாய் மக்கள் அனைவரையும் நேசிப்போம்.
நிறத்தால் மொழியால் வேறுபட்டாலும்  நாம் இந்தியர் என்ற  உணர்வோடு நாட்டை நேசிப்போம்

                                                                                           JAI HIND . 







 

Sunday, April 8, 2012

பேஸ் புக் ஐ பழைய தோற்றத்திற்கு மாற்ற.

உலகில் பெரும் பாலோரால் பயன்படுத்தப்படும் முதன்மை 
 வலை தளம் பேஸ் புக்  பயனீட்டாளர்களின் ப்ரோபில் பக்கத்திற்கு
 TIME LINE என்னும் புதிய வடிவத்தை அறிமுகம் செய்தது.
இந்த புதிய தோற்றம் சிலருக்கு பிடித்தும் பிடிக்காமலும் உள்ளது.
 இந்த TIMELINE தோற்றம் பிடித்ததோ இல்லையோ  அனைவரும்
பயன்படுத்தியே தீர வேண்டும் என திணித்தது இந்த வலைத்தளம்.

800 மில்லயன் வாசகர்களை கொண்ட இந்த முதன்மை தளம்
இவ்வாறு செய்தது பலருக்கும் அதிருப்பியை தந்தது .
இருந்தாலும் சிலர் வேறு வழி இல்லாமல் இந்த TIMELINE
வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.

உங்களுக்கு இந்த TIMELINE தோற்றம் பிடிக்க வில்லையா?
இதை பழைய தோற்றத்திற்கு மாற்ற விரும்புகிறீர்களா?

ஆம் என்றால் கீழே உள்ள வழி முறைகளை  பின்பற்றுங்கள்.
முதலில் timeline removeinஇந்த லிங்க் கிளிக் செய்து இந்த
தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு கீழே இருப்பது போல் விண்டோ  வரும்
பயர் பாக்ஸ் ,மற்றும்  குரோம்  உலவியை பயன் படுத்துவோர்
அதற்க்கான லோகோவை கிளிக் செய்து அந்த நீட்சியை
உங்கள்  பிரௌசரில் இணைத்து கொள்ளுங்கள்.
(safari பயன்படுத்துவோருக்கான நீட்சி விரைவில் பயன் பாட்டுக்கு வரும்

இந்த நீட்சி உங்கள் பிரௌசரில் இன்ஸ்டால் ஆனவுடன்
பேஸ் புக் பக்கத்தை திறந்து பாருங்கள்.timeline வசதி
மறைந்து பழைய தோற்றத்தை காண்பீர்கள்.

இனி உங்களுக்கு பிடித்த தோற்றத்தில் பேஸ் புக் பயன்படுத்தலாம்.

(பி .கு )
            இந்த நீட்சியை un install செய்வதன் மூலம் எந்த நேரமும்
timeline தோற்றத்திற்கு மாறலாம்.


                                                                                                        thanks jaffna anton

இணைய தளங்களில் தமிழில் எழுதுவது எப்படி?

1. இந்த சுட்டிக்கு போங்க  கீழே இருப்பது போல் இருக்கும் . 


2. CHOOSE YOUR IME LANGUAGE ல TAMIL ல தேர்வு செய்யுங்க
பிறகு download google IME அ கிளிக் பண்ணுங்க

3.googletamilinputsetup.exe  dwonload ஆகும்.
download ஆன exefile open பண்ணி  இன்ஸ்டால் பண்ணுங்க.

4. பிறகு instaalation.



5. இவ்வாறு வரும் அவ்வளவுதான் .இதுல ''அ '' பட்டனை கிளிக்
பண்ண மொழி மாறும் .

******இதன் பிறகு (A/I+SHIFT)அழுத்த மொழி மாற்றலாம்.

(பின் குறிப்பு) இதற்க்கு FIREFOX,GOOGLE BROWSER தேவை

அல்லது நேரடியாக எழுத முகவரி










 

Friday, April 6, 2012

இணையம் இல்லாமல் பேஸ் புக் பயன்படுத்தலாம்

இனி இணைய வசதி இல்லாமலேயே கைபேசி மூலம் பேஸ் புக் இல் வலம் வரலாம்.இந்த வசதியை பேஸ் புக் இந்தியாவும், போனிடுவிஷ், இணைந்து தருகிறது.இண்டர்நெட் வசதி இல்லாத எந்த ஒரு சாதாரண கை பேசியிலும்,இந்த வசதியை பயன் படுத்தி கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.
ஆனால் இந்த வசதி தற்போது ஏர்செல்,ஏர்டெல் ஐடியா,மற்றும் டாடா டோகொமோ,ஆகிய மொபைல் சேவையை பயன்படுத்தும் இந்திய பயன்பாட்டாளர் மட்டுமே பயன் படுத்த முடியும்.

இந்த சேவையைபெற *325 # டயல் செய்தவுடன் உங்கள் பேஸ் புக் பயனாளர் சொல்லையும்,கடவு சொல்லையும் உள்ளிட்டு,பின்பு ஆன்லைன் இல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்,புதிய நண்பர்களையும் செர்த்துகோள்ளலாம்.இதற்க்கு நீங்கள் எந்த ஒரு அப்ளிகேசனையும் பதிவிறக்கம் செய்ய தேவை இல்லை.இதற்காக நிர்ணயிக்க பட்ட தொகை ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் மட்டுமே.பயன்படுத்தும் அளவுக்கு வரம்பு கிடையாது.கட்டணம் மிக குறைவு என்பதால் பயனீட்டாளர்ருக்கு கொண்டாடமே.

Sunday, April 3, 2011

இந்தியாவின் தொடரும் மற்றொரு சாதனை

கிரிகெட் உலகில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய உலக கோப்பை கைபற்றி சாதனை படைத்தது. ஒட்டுமொத்த இந்தியாவையும் மகிட்சி கடலில் ஆழ்த்திய எமது வீரர்களுக்கு நன்றி .இத்தொடரில் இந்திய சந்தித்த ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களுக்கு விருந்தே !குறிப்பாக 12 ஆண்டுகள் கிரிகெட் உலகில் முடிசூட மன்னன், கடந்த 2003 இல் எம்மை இறுதி போட்டியில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியை கால் இறுதி ஆட்டத்தில் வீழ்த்திய எமது வீரர்களின் திறமைக்கு குறிப்பாக (யுவராஜ் ) ஒரு சல்யுட் . இந்தியாவை பொறுத்த வரையில் இறுதி போட்டியை விட பாகிஸ்தானுடன் மோதிய அரை இருத்தியே அனைவரும் எதிர்பார்த்த ஒரு போட்டியாகும் . வாகன நெரிசலில் சிக்கித்தவிக்கும் சென்னை நகர சாலைகள் வெறிச்சோடி கிடக்க இந்திய முழுவதும் மக்கள் தொலைகாட்சி முன் இருக்க இந்தியாவின் எராளமான தலைவர்கள் முஹலி அரங்கில் சங்கமித்து இருந்தனர் என்றால் அது மிகையாகாது . இத்தொடர் முழுதும் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி , இந்தியாவிடம் அடிபணிய கரணம் எங்கள் அனுபவம் மிக்க திறமையான வீரர்களின் ( சச்சின் ) திறமைக்கு முன்னால் இவர்களின் திறன் எடுபடாமல் போனதே ! பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய , இறுதி போட்டியில் இலங்கையை எதிர்கொள்ள, ஏறதாழ இந்தியாவின் வெற்றி உறுதியானது பலமிக்க இந்திய அணிக்கு இவர்கள் நிர்ணயத இலக்கு 274 . பலமான எங்கள் அணிக்கு இது எளிதான இலக்கு என்றாலும் . ஆரம்பத்தில் அவர்கள் சாய்த்த இரண்டு விக்கெட் ( சச்சின் , சேவக் ) வெற்றி இலங்கை பக்கம் சிறிது சாய்ந்தது . ஏனைய வீரர்களின்(கம்பீர் , கோலி, தோணி , யுவராஜ் ) திறமையான ஆட்டத்தல் இந்திய சாதனை படைக்க அரங்கமே ஆனந்த கண்ணீரில் நனைத்தது .இத்தொடர் முழுதும் சிறப்பாக விளையாடிய சச்சின் இன்னும் பாத்து ஆண்டுகள் ,அணியில் இன்னும் பல சாதனை படைக்க வேண்டும் , என்பதே என்னை போன்ற ஏனையோரின் ஆவல் , எதற்கு யாம் இறைவனை பிராத்திப்போம் , இந்திய இன்னும் பல சாதனை படைக்க வாழ்த்துவோம் . i love my india