Svr.pamini

Sunday, August 26, 2012

தமிழக மாவட்ட ஆட்சியர்,அலுவலகங்கள்.

அரியலூர்


திருமதி அணு ஜார்ச்

விலாசம்:  மாவட்ட ஆட்ச்சியர், மாவட்ட ஆட்ச்சியர் அலுவலகம்.
ஜெயங்கொண்டம் சாலை அரியலூர்.  621704
அலுவலக தொலைபேசி : 04329 - 223351 : 04329 - 223331
மின்னஞ்சல்: collrari@tn.nic.in

நிகரி :04329 - 223351.

ராமநாதபுரம்

திரு கே .நந்தகுமார்.
மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
இராமநாதபுரம் - 623501
அலுவலக தொலைபேசி:04567- 231220 Þ™ô‹ : 220648
மின்னஞ்சல் :collrrmd@tn.nic.in
நிகரி 04567- 231220
 

ஈரோடு

 

மாவட்ட ஆட்சியர்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
ஈரோடு .
அலுவலகம்  0424-2266700, 2260207-11/222  வீடு   : 0424-2262444
மின்னஞ்சல் :collrerd@tn.nic.in
 

கடலூர்


திரு ராஜேந்திர ரத்னு .
மாவட்ட ஆட்ச்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கடலூர் :607001.
தொலைபேசி : 04324 - 257555  வீடு  : 255444, 257112
மின்னஞ்சல் :collrcud@tn.nic.in
நிகரி : 04324- 257800.

 

கன்னியாகுமரி


திரு எஸ் நாகராஜன் .
மாவட்ட ஆட்சியர்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கன்னியாகுமரி நாகர்கோவில்   - 629001
தொலைபேசி :04652-279555 இல்லம் : 260666
மின்னஞ்சல் :collrkkm@tn.nic.in
நிகரி 04652-260999.

 

காஞ்சிபுரம்


திரு ஹனீஸ்சாப்ரா .
மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
காஞ்சிபுரம்  631501
தொலைபேசி  044 - 27237433 ; இல்லம்   : 27238478
மின்னஞ்சல் :collrkpm@tn.nic.in
நிகரி  044 - 27237789, 27238477

 

கிருஷ்ணகிரி



திரு சி.என் ,மகேஸ்வரன் .
மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
கிருஷ்ணகிரி.
தொலைபேசி    04343 - 239300 வீடு : 04343 - 239400
மின்னஞ்சல் collrkgi@tn.nic.in
நிகரி 04343 - 239100.

 

கோவை


திரு.எம்  கருணாகரன்.
மாவட்ட ஆட்சியர்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
கோவை -- 641018.
தொலைபேசி  : 0422-2301320 இல்லம் : 0422-2222230, 2222630.
மின்னஞ்சல்,collrcbe@tn.nic.in,

நிகரி;0422-2222630.

சிவகங்கை


திரு வி .ராஜாராமண்.
மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
சிவகங்கை :623562
தொலைபேசி 04575-241466 இல்லம் 04575-241455
மின்னஞ்சல் :collrsvg@tn.nic.in
நிகரி :04575-241585 Þ: 04575-241581.

சென்னை


திருமதி எஸ்.ஜெயந்தி
மாவட்ட ஆட்சி தலைவர்
எம் சிங்கார வேலர் மாளிகை
32,ராஜாஜி சாலை சென்னை -1
தொலைபேசி :044-25228025
மின்னஞ்சல் :collrchn@tn.nic.in
நிகரி  25228025.

சேலம்


திரு கே. மகாரபூசனம்.
மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
சேலம்  636001
தொலைபேசி 0427-2452244
மின்னஞ்சல் collrslm@tn.nic.in
நிகரி -0427-2400700.
 

தஞ்சாவூர்


திரு கே. பாஸ்கரன் .
மாவட்ட ஆட்சியர் ,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தஞ்சாவூர் - 613001
தொலைபேசி 04362-230102
மின்னஞ்சல் collrtnj@tn.nic.in
நிகரி 04362-230857 .

தருமபுரி


திருமதி ஆர்.லில்லி.
மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
 தருமபுரி - 636705
தொலைபேசி 04342 - 230500
மின்னஞ்சல் collrdpi@tn.nic.in
நிகரி 04342 - 230886 .

திண்டுக்கல்


திரு என். வெங்கடாசலம் .
மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திண்டுக்கல் - 624004
தொலைபேசி :0451 - 2461199, 2460080-4
மின்னஞ்சல் : collrdgl@tn.nic.in
நிகரி :91-451-2432600.

திருச்சிராப்பள்ளி


திருமதி ஜெயஸ்ரீ முரளீதரன் .
மாவட்ட ஆட்சித்தலைவர்,
 மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்
திருச்சி  - 620001.
தொலைபேசி :0431-2415358
மின்னஞ்சல் :collrtry@tn.nic.in
நிகரி :0431-2411929, 2420181

திருநெல்வேலி


DR.R .செல்வராஜ்
மாவட்ட ஆட்சி தலைவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
நெல்லை-- 627009.
தொலைபேசி :0462-2500828
மின்னஞ்சல்:collrtnv@tn.nic.in
நிகரி :0462-2500244.

திருவள்ளூர்


திரு.ஆஷிஸ் சட்டர்ஜி .
மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
திருவள்ளூர்  - 602001.
தொலைபேசி 044 - 223344
மின்னஞ்சல்-  collrtlr@tn.nic.in
நிகரி ,-044 - 27661200.

திருவண்ணாமலை


டாக்டர், பிங்களே விஜிய மாருதி,
மாவட்ட ஆட்சி தலைவர் ,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் .
திருவன்னாமை - 606601.
தொலைபேசி  : 04175-233333
மின்னஞ்சல் collrtvm@tn.nic.in
நிகரி 04175-232222.

திருவாரூர்


டாக்டர்,எஸ் , நடராஜன் .
மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருவாரூர் - 610001.
தொலைபேசி
மின்னஞ்சல்
நிகரி
 
 
 
 
 

Tuesday, August 21, 2012

தமிழிழமும்.... தமிழகமும்

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் ஏதாவதொரு தேசிய தினம் வந்தால், இங்கு சிலரால் இந்தியா வேசி நாடாக்கப்படுகிறது. இந்தியர்கள் வேசி மக்கள் ஆக்கப்படுகிறார்கள்.இந்த விஷமுள் 2009க்கு முன்பு வரை இல்லை.பிறகு ஒருசில முகமூடி இட்ட ஈழ தமிழர்கள் சிலர் இதை தொடங்கினர்.இது போன்ற வலைத்தளங்களின் மூலம் தமிழ் நாட்டு தமிழர்களை நேர்த்தியாக மூலை சலவை செய்து, தமிழர்களையே உரமாக்கி விட்டனர்.

 இதை விதைத்து யார் விதைத்ததின் நோக்கம் என்ன ?


இப்படி பட்ட தமிழர்களின் வாதத்தை நோக்கிநோமேயானால்.

1.டெல்லி எதிர்ப்பு ,தமிழகம் தன்னாட்சி பெறுதல்அதாவது தனிநாடு..இப்படி சில ...

தமிழர்களை மூலை சலைவை செய்து இதை விதிப்பதால் இவர்களுக்கு என்ன லாபம் ?

 

ஏறத்தாழ இருபத்தைந்து கால புலிகளின் சிங்கள போரில் புலிகளின் பலமே தமிழகம் தான். போர் காலங்களில் புலிகளுக்கு தேவையானா போர் தளவாட பொருள்கள், போரினால் சில பகுதிகள் துண்டிக்கப்ப்படும்போது அவர்களுக்கு தேவையான அத்தியவாசிய பொருள்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்து தமிழக கடல்வழியாகதான் சென்றது. இவர்களுக்கு தேவையானவற்றை தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சேகரித்து கொடுக்க சில முகவர்கள் இருந்தனர்.இவர்களுக்கு பிரபாகரனுடன் நேரடி தொடர்பும் இருந்தது. தேவையான பொருள்களை கொண்டு செல்ல புலிகள் ஆறு முதல் பத்து பேர் கொண்ட குழுவாக தமிழகம் நிழைவார்கள். இவர்களுக்கு உதவிய தமிழ் நாட்டவருக்கு, இன உணர்வோ, ஈழத்து பாசமோ கிடையாது எதிர்பார்ப்பு எல்லாம் புலிகளிடம் இருந்து கிடைக்கும் லட்சம் லட்சமான பணம் தான். இவை அனைத்தும் மறைமுகமாக நடந்தது.

 

 அப்படி பட்ட பல முகவர்களில் ஒருவர்தான் பேரறிவாளன். அவர் வாங்கி தந்த பல பொருள்கள் அவருக்கு பல லாபத்தை தந்திருக்கலாம், அவர் இருதியாக வாங்கிய 9vol பேட்டரி அந்த அப்பாவிக்கு தூக்கு வாங்கித்தரும் என்று அந்த அப்பாவி நினைத்திருக்க வாய்ப்பில்லை.

90m ஆண்டுக்கு பிறகு மத்திய அரசு விழித்துகொண்டது கடலோர பாதுகாப்பை இறுக்கம் செய்தது.புலிகள் இயக்ககத்தின் மீது தடை விழுத்ததால், புலிகளுக்கு உதவிய செல்வந்தர்களும், புலிகளால் ஆதாயம் ஈட்டிய அரசியல் பிரமுகர்களும் அடக்கி வாசிக்க வேண்டிய நிலை .


ஏறத்தாழ ஐம்பது சதவீதம்  தமிழகத்தின் உதவி துண்டிக்க பட்டது.

மெல்ல மெல்ல புலிகளின் ஆதிக்கம் சரிந்து போர் இறுதிகட்டத்தை எட்டிய பொழுது, தமிழக எல்லை பகுதி கதவடைக்கப்பட்டது,

ராஜபட்சேவின் நோக்கம் இறுதிகட்ட போரில் ஈழத்தில் இருக்கும் தமிழர்களை வேரறுப்பது.இது நடக்கும் என்று அறிந்தும்

இறுதிகட்ட போரில் தமிழர்களின் பாதுகாப்பை கண்டுகொள்ளாத மத்திய அரசின் போக்கு  தமிழர்கள் மீது கொண்ட  அதிக பட்ச காழ் புணர்ச்சியின் வெளிப்பாடு. இதன் பிறகு ஒட்டுமொத்த உலக தமிழர்களின் கவனம் ஈழத்தின் மீது திரும்பியது,

 

எஞ்சி இருக்கும் அப்பாவி தமிழர்களுக்கு அமைதியான  சுய வாழ்வையும்,மரியாதையையும்,  தருவது தனி நாடோ , சம உரிமையோ , தேவை இப்பொழுது அந்த சமூகத்திற்கு அமைதியும், பொருளாதார சீரமைப்பும் ,அதை நிலை படுத்த நிலையாய அரசியல் தலைமை.


தற்போதைய தேவைக்கு எள்ளல்லவும் தமிழக அரசியல் கட்சிகள் உதவ மாட்டார்கள் என்பது  ஈழத்தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும், இருப்பினும் நம்புவதற்கு இவர்களை விட்டால் அவர்களுக்கு வேறு வழியும் இல்லை.

 

புலிகளின் ஆதரவாளர்களை பொறுத்த மட்டில் இந்த அப்பாவி மக்களின் அவலத்தை பத்தி கவலை இல்லை, மீண்டும் இயக்கத்தை கட்டி எழுப்புவதுதான். நிச்சயம் இலங்கையில் அது  முடியாத காரணத்தால்  தமிழகமே அதற்க்கு சரியான இடம். அன்று மறைமுகமாக செயல்பட்ட முகவர்களை, இன்று இன அழிப்பை சொல்லி  இன உணர்வை எழுப்பி  அதை செயல் படுத்த முயல்கின்றனர். தமிழர்களின் ஓட்டுக்காகஇங்கே அரசியல் கட்ச்சியினரும்  அதற்க்கு துணை போவது  அவலம்.

 

 

இவர்களின் தற்போதைய பெரும் பிரச்சனை தமிழக கடல் பகுதியின் பாதுகாப்பு தான், கோடியக்கரை, ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவத்தின் பின்னணியும் அதுவே, மற்றோண்டு மத்திய அரசு கொண்டுள்ள புலிகள் மீதான தடை.. இவ்விறேண்டயும்  நீக்கினால் புலிகளுக்கு மிக எளிதாக தமிழக காட்டு பகுதிகளில்  பயிற்சி கூடாரங்கள் அமைத்து விடலாம்.. இதனாலேயே தமிழக தமிழர்களை, மத்திய அரசுக்கு எதிராக செயல்பட  மூலை சலவை செய்ய படுகின்றனர்.

 

மத்திய அரசுக்கு எதிராக மட்டும் அல்ல , பெரும் பான்மை மக்களின் நலனுக்கு எதிராக, மக்கள் ஆட்சியில் நம்பிக்கை அற்றவர்களாக, மாற்றுவதே இவர்கள் நோக்கம், இதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்பது, இவர்களின் நம் தேசிய கோடி எரிப்பு, கருப்பு கோடி ஏற்றியத்தில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். இவர்களின் குள்ள நரி தனத்தால் இன்னும் சிறிது நாட்களில், தமிழகம் தனிநாடு கேட்டு பெரும் போராட்டம் வெடிக்கலாம், கலவரம் இரத்த களறி என்று தமிழகத்தின் அமைதி  சீர் குலையலாம்..

 

ஈழத்தில் அப்பாவி தமிழரின் நல்வாழ்வுக்காக  தமிழன் என்ற முறையில் எது வேண்டுமானாலும் செய்யலாம், ஓட்டு மொத்த ஈழ தமிழர்களையும் தமிழகத்தில் குடியமர்த்த என்னுடைய வீடு நிலம் எதை கேட்டாலும் தருவேன். ஆனால் சில இரத்த வெறியர்களின் பழிவாங்கும் படலத்துக்கு தமிழகத்தை இரத்த காடாக்க அனுமதிக்க முடியாது.

 

இறுதியாக ஓன்று மட்டும் நிச்சயம் ஈழத்தில் இன்னொரு முறை போர் நிகழ்ந்தால் அங்குள்ள அனைத்து அப்பாவி தமிழர்களையும் நாம் இழப்போம். ஈழத்தில் தமிழர்கள் வாழ்ந்ததை வரலாற்றில் படிக்க வேண்டிய அவலம் நேரலாம்.

 

 

 

 

 


Saturday, August 18, 2012

மண்ணில் ஒரு சொர்க்கம் கோடியக்கரை.

இன்று கலையிழந்து கற்பிழந்து  கிராமத்திற்கான அனைத்து அடையாளங்களையும் தின்று விட்ட நாகரீக மோகத்தினிடையே, பழமை மாறாமல், பல வரலாற்று சுவடுகளை தாங்கிய படி  கவர்ச்சியாய் வருவோரை வசீகரிக்கும் ஒரு அழகிய கிராமம். நான் பிறந்து வளர்ந்து,உப்பு காற்றில் உழன்று, புழுதி மழையில் நனைந்த அழகிய கிராமம் கோடியக்கரை.

ஆயிரம் ஆயிரம் சிறப்புக்கள்..அனைவரும் காணவேண்டிய கண்கொள்ளா அழகு.

இந்த கிராமம் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகில் உள்ளது. இந்திய வரைபடத்தில் பார்த்தோம் எனில் இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் கடல் பாக்ஜலசந்தி இந்த கிராமத்தில் தான் உள்ளது.இங்கிருந்து இலங்கை வெறும் இருபத்தைந்து கிலோ மீட்டர் தான்.

எப்பொழுதும் குளிந்த காற்று வீசக்கூடிய இந்த அழகிய கடற்க்கரை கிராமத்தின் தனி சிறப்பே. அங்குள்ள சதுப்பு நில காடுகள் தான்.

இங்கு ஆயிரக்கணக்கான புள்ளி மான்களும் வெளிமாங்களும் கூட்டங் கூட்டமாய் துள்ளி திரிவரை காணலாம்.
மயில்கள் அசைந்து அன்னநடை போடும் அழகை காணலாம். காலை மற்றும் மாலை நேரத்தில் குயில்களின் இனிய கானம் கேட்க்கலாம்.

இங்கு 17.26 சதுர கி.மீ பரப்பளவில்  1967ஆம் ஆண்டு கலைமான்களைக் காப்பதற்காக உருவாக்கிய வனஉயிரின உய்விடம் இங்குள்ளது.
இந்த காட்டில் பன்றிகள், நரிகள்,சில அரியவகை ஆமைகள். கோடிய விஷமுள்ள பாம்புகள்,முயல்கள்
தான் தோன்றி குதிரைகள்

(ஆங்கிலேயர்களால் வளர்க்கப்பட்டு பின்னர் விட்டுவிட பட்ட குதிரைகள் நாளடைவில் அடங்காமல் சுற்றி திரியும் தான் தோன்றி குதிரையாக மாறிவிட்டன)

இங்குள்ள காட்டில் 150 வகையான தாவரங்கள் உள்ளன பல அறிய வகை மூலிகைகளும் இங்குள்ளது  குறிப்பிடத்தக்கது.இங்குள்ள மூலிகைகளை பாதுகாக்க  வனத்துறை மூலிகை வனம் அமைத்து அதை பாதுகாத்து வருகின்றனர்.

அடுத்து இங்குள்ள பறவைகள் சரணாலயம்.





அக்டோபர் தொடங்கி மார்ச் மாதம் வரை ஆயிர கணக்கான வெளிநாட்டு பறவைகளை இங்கு காணலாம்.ஆண்டொன்றுக்கு இரண்டரைலட்சம் பூ நாரைகள் இங்கு தரை இறங்கும்.இந்த பறவைகள் பற்றி தனியாக ஒரு பதிவிடுகிறேன்.

இந்த கிராமம் தாங்கி நிற்கும் வரலாற்று சின்னங்கள் .

 .
2.004 சுனாமி அழித்தது போக எஞ்சி நிக்கும்  1000 ஆண்டுகள் பழைமையான சோழர் காலத்துக் கலங்கரை விளக்கம் ஒன்று சிதைந்த நிலையிற்பதை இன்றும் காணலாம்

ராமர் பாதம்


இங்கு உயர்ந்த மணல் மேடு ஒன்றில்  ராமருடைய திருப்பாதம் பதிக்க பட்ட ஆலயம் ஓன்று உள்ளது.( நான் ஏற்க்கனவே சொல்லியிருந்தேன் இங்கிருந்து இலங்கை வெறும் இருபத்தைந்து கிலோ மீட்டர்தான் என்று)சீதையை ராவணன் கடத்தி சென்ற பொழுது ராமர் இங்கிருந்து இலங்கையை பார்த்தாராம்,ராவண கோட்டையின் பின் புறம தெரிந்ததாம்.பின் புறம் செல்வது கோழை தனம் என்றெண்ணி  ராமேஸ்வரம் வழியாக சென்றதாக வரலாறு.


அடுத்து சிறப்பு மிக்க ஆலயம் ஓன்று ...



தேவர்களும் அசுரர்களும் பாற்க்கடலை கடைந்து கிடைத்த அமிர்தத்தை பருகிய பிறகு மீதமுள்ள பகுதியை வாயுதேவனிடம் கொடுத்தனர். அவர் அதை எடுத்துக் கொண்டு ஆகாய வழியாக செல்கையில் அசுரர்கள் வாயுவிடமிருந்து அமுத கலசத்தை கைப்பற்ற முனைந்தனர். வாயுதேவன் முருகனை மனதால் வணங்கி அமுத கலசத்தைக் கீழே போட, அதை முருகப்பெருமான் தன் கையில் ஏந்திக் கொண்டார். அமுத கலசத்தில் இருந்து ஒரு துளி அமிர்தம் தவறி பூமியில் கோடியக்கரை தலம் இருக்கும் இடத்தில் விழுந்து ஒரு லிங்கமாக மாறியது. அதனாலேயே இங்குள்ள மூலவருக்கு அமிர்தகடேசுவரர் என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் உள்ள பிரகாரத்தில் இருக்கும் கிணறு அமிர்த தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. வங்கக் கடலோரம் அமைந்துள்ள இத்தலம் ஒரு கோளிலித் தலமாகும். ஆகையால் இங்குள்ள நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்திருக்கின்றன.


இந்த ஆலயத்தை பற்றி மேலும் தகவல் அறிய இங்கே சொடுக்குங்கள்


 

பொன்னியின் செல்வன்  நூலில் கல்கி அவர்கள் எங்கள் கிராமத்தை சுவைபட விவரித்து இருக்கிறார்.அதை படிக்க இங்கே இங்கே சொடுக்குங்கள் .


 

இப்படி எங்கள் கிராமம் அனைவரும் காண வேண்டிய அழகிய சொர்க்கம். வாய்ப்பு கிடைப்போர் அவசியம் ஒருமுறை வந்து செல்லுங்கள் நாகப்பட்டினத்தில் இருந்து 57 கிலோ மீட்டர்தூரம். வரும் வழி எங்கும் வேளாங்கண்ணி, வேதாரண்யம் என்று அனேக சுற்றுலா தளங்கள் உள்ளன..