தமிழிழமும்.... தமிழகமும்
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் ஏதாவதொரு தேசிய தினம் வந்தால், இங்கு சிலரால் இந்தியா வேசி நாடாக்கப்படுகிறது. இந்தியர்கள் வேசி மக்கள் ஆக்கப்படுகிறார்கள்.இந்த விஷமுள் 2009க்கு முன்பு வரை இல்லை.பிறகு ஒருசில முகமூடி இட்ட ஈழ தமிழர்கள் சிலர் இதை தொடங்கினர்.இது போன்ற வலைத்தளங்களின் மூலம் தமிழ் நாட்டு தமிழர்களை நேர்த்தியாக மூலை சலவை செய்து, தமிழர்களையே உரமாக்கி விட்டனர்.
இதை விதைத்து யார் விதைத்ததின் நோக்கம் என்ன ?
இப்படி பட்ட தமிழர்களின் வாதத்தை நோக்கிநோமேயானால்.
1.டெல்லி எதிர்ப்பு ,தமிழகம் தன்னாட்சி பெறுதல்அதாவது தனிநாடு..இப்படி சில ...
தமிழர்களை மூலை சலைவை செய்து இதை விதிப்பதால் இவர்களுக்கு என்ன லாபம் ?
ஏறத்தாழ இருபத்தைந்து கால புலிகளின் சிங்கள போரில் புலிகளின் பலமே தமிழகம் தான். போர் காலங்களில் புலிகளுக்கு தேவையானா போர் தளவாட பொருள்கள், போரினால் சில பகுதிகள் துண்டிக்கப்ப்படும்போது அவர்களுக்கு தேவையான அத்தியவாசிய பொருள்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்து தமிழக கடல்வழியாகதான் சென்றது. இவர்களுக்கு தேவையானவற்றை தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சேகரித்து கொடுக்க சில முகவர்கள் இருந்தனர்.இவர்களுக்கு பிரபாகரனுடன் நேரடி தொடர்பும் இருந்தது. தேவையான பொருள்களை கொண்டு செல்ல புலிகள் ஆறு முதல் பத்து பேர் கொண்ட குழுவாக தமிழகம் நிழைவார்கள். இவர்களுக்கு உதவிய தமிழ் நாட்டவருக்கு, இன உணர்வோ, ஈழத்து பாசமோ கிடையாது எதிர்பார்ப்பு எல்லாம் புலிகளிடம் இருந்து கிடைக்கும் லட்சம் லட்சமான பணம் தான். இவை அனைத்தும் மறைமுகமாக நடந்தது.
அப்படி பட்ட பல முகவர்களில் ஒருவர்தான் பேரறிவாளன். அவர் வாங்கி தந்த பல பொருள்கள் அவருக்கு பல லாபத்தை தந்திருக்கலாம், அவர் இருதியாக வாங்கிய 9vol பேட்டரி அந்த அப்பாவிக்கு தூக்கு வாங்கித்தரும் என்று அந்த அப்பாவி நினைத்திருக்க வாய்ப்பில்லை.
90m ஆண்டுக்கு பிறகு மத்திய அரசு விழித்துகொண்டது கடலோர பாதுகாப்பை இறுக்கம் செய்தது.புலிகள் இயக்ககத்தின் மீது தடை விழுத்ததால், புலிகளுக்கு உதவிய செல்வந்தர்களும், புலிகளால் ஆதாயம் ஈட்டிய அரசியல் பிரமுகர்களும் அடக்கி வாசிக்க வேண்டிய நிலை .
ஏறத்தாழ ஐம்பது சதவீதம் தமிழகத்தின் உதவி துண்டிக்க பட்டது.
மெல்ல மெல்ல புலிகளின் ஆதிக்கம் சரிந்து போர் இறுதிகட்டத்தை எட்டிய பொழுது, தமிழக எல்லை பகுதி கதவடைக்கப்பட்டது,
ராஜபட்சேவின் நோக்கம் இறுதிகட்ட போரில் ஈழத்தில் இருக்கும் தமிழர்களை வேரறுப்பது.இது நடக்கும் என்று அறிந்தும்
இறுதிகட்ட போரில் தமிழர்களின் பாதுகாப்பை கண்டுகொள்ளாத மத்திய அரசின் போக்கு தமிழர்கள் மீது கொண்ட அதிக பட்ச காழ் புணர்ச்சியின் வெளிப்பாடு. இதன் பிறகு ஒட்டுமொத்த உலக தமிழர்களின் கவனம் ஈழத்தின் மீது திரும்பியது,
எஞ்சி இருக்கும் அப்பாவி தமிழர்களுக்கு அமைதியான சுய வாழ்வையும்,மரியாதையையும், தருவது தனி நாடோ , சம உரிமையோ , தேவை இப்பொழுது அந்த சமூகத்திற்கு அமைதியும், பொருளாதார சீரமைப்பும் ,அதை நிலை படுத்த நிலையாய அரசியல் தலைமை.
தற்போதைய தேவைக்கு எள்ளல்லவும் தமிழக அரசியல் கட்சிகள் உதவ மாட்டார்கள் என்பது ஈழத்தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும், இருப்பினும் நம்புவதற்கு இவர்களை விட்டால் அவர்களுக்கு வேறு வழியும் இல்லை.
புலிகளின் ஆதரவாளர்களை பொறுத்த மட்டில் இந்த அப்பாவி மக்களின் அவலத்தை பத்தி கவலை இல்லை, மீண்டும் இயக்கத்தை கட்டி எழுப்புவதுதான். நிச்சயம் இலங்கையில் அது முடியாத காரணத்தால் தமிழகமே அதற்க்கு சரியான இடம். அன்று மறைமுகமாக செயல்பட்ட முகவர்களை, இன்று இன அழிப்பை சொல்லி இன உணர்வை எழுப்பி அதை செயல் படுத்த முயல்கின்றனர். தமிழர்களின் ஓட்டுக்காகஇங்கே அரசியல் கட்ச்சியினரும் அதற்க்கு துணை போவது அவலம்.
இவர்களின் தற்போதைய பெரும் பிரச்சனை தமிழக கடல் பகுதியின் பாதுகாப்பு தான், கோடியக்கரை, ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவத்தின் பின்னணியும் அதுவே, மற்றோண்டு மத்திய அரசு கொண்டுள்ள புலிகள் மீதான தடை.. இவ்விறேண்டயும் நீக்கினால் புலிகளுக்கு மிக எளிதாக தமிழக காட்டு பகுதிகளில் பயிற்சி கூடாரங்கள் அமைத்து விடலாம்.. இதனாலேயே தமிழக தமிழர்களை, மத்திய அரசுக்கு எதிராக செயல்பட மூலை சலவை செய்ய படுகின்றனர்.
மத்திய அரசுக்கு எதிராக மட்டும் அல்ல , பெரும் பான்மை மக்களின் நலனுக்கு எதிராக, மக்கள் ஆட்சியில் நம்பிக்கை அற்றவர்களாக, மாற்றுவதே இவர்கள் நோக்கம், இதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்பது, இவர்களின் நம் தேசிய கோடி எரிப்பு, கருப்பு கோடி ஏற்றியத்தில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். இவர்களின் குள்ள நரி தனத்தால் இன்னும் சிறிது நாட்களில், தமிழகம் தனிநாடு கேட்டு பெரும் போராட்டம் வெடிக்கலாம், கலவரம் இரத்த களறி என்று தமிழகத்தின் அமைதி சீர் குலையலாம்..
ஈழத்தில் அப்பாவி தமிழரின் நல்வாழ்வுக்காக தமிழன் என்ற முறையில் எது வேண்டுமானாலும் செய்யலாம், ஓட்டு மொத்த ஈழ தமிழர்களையும் தமிழகத்தில் குடியமர்த்த என்னுடைய வீடு நிலம் எதை கேட்டாலும் தருவேன். ஆனால் சில இரத்த வெறியர்களின் பழிவாங்கும் படலத்துக்கு தமிழகத்தை இரத்த காடாக்க அனுமதிக்க முடியாது.
இறுதியாக ஓன்று மட்டும் நிச்சயம் ஈழத்தில் இன்னொரு முறை போர் நிகழ்ந்தால் அங்குள்ள அனைத்து அப்பாவி தமிழர்களையும் நாம் இழப்போம். ஈழத்தில் தமிழர்கள் வாழ்ந்ததை வரலாற்றில் படிக்க வேண்டிய அவலம் நேரலாம்.
No comments:
Post a Comment