Svr.pamini

Wednesday, December 8, 2010

இவர்களே இந்தியாவின் சாபக்கேடு

எமது அரசியல் வாதிகளுக்கு அவ்வப்போது அறிக்கை விடுவதற்கு ஈழ தமிழர் பிரச்னை இல்லை என்றாகிவிட்டது இப்போது காஹ்மீரை கையில் எடுத்துகொன்டனர் . மாநில சுகாதாரம் மற்றும் தோட்டக்கலைத்துறை அமைச்சரான ஷாம்லால் சர்மா, காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசுகையி்ல்,காஷ்மீரை தனி நாடாக அறிவிக்க வேண்டும். அதே நேரத்தில் ஜம்முவை தனி மாநிலமாகவும் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். இதை செய்வது தான் காஷ்மீருக்கும் மக்களுக்கும் நல்லது என்றார்.இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது .இதுபோன்று எதாவது அவ்வபோது பேசாவிட்டால் இவர்கள் இருப்பது மக்களுக்கு தெரியாமல் போய்விடும்.ஊர் ரெண்டுபட்டால் கூத்தடிக்கு கொண்டாட்டம் . இவர்கள் பேச எதாவது ஒரு பிரச்னை தேவை ,அது கிடைக்காவிட்டால் இவர்களே உருவாக்கிவிடுவார்கள். டெல்லியில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கில். இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராய்,காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை. ஆகவே காஹ்மீரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்து விடலாம் என்று பேசாமல் பேசியிருந்தார்.சட்டம் தன் கடமையை செய்யும் .இது ஒருபுறம் இருக்க ....நமது அரசியல் வாதிகளுக்கு சொல்லவாவேண்டும் .காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் எந்தக் குற்றமும் இல்லை என்று நமது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் குரலை நெறிக்க முயற்சி செய்யும் மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.மேலும் ,காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பது எல்லாரும் அறிந்த உண்மை.அங்கு 2 இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகுதான் அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.என்றும் ,மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் காஷ்மீருக்கு சென்ற அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவில் நானும் இடம் பெற்று, காஷ்மீரின் நிலைமையை நேரில் கண்டறிந்தேன்.`இந்திய ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்' என்று அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் எங்களிடம் வெளிப்படையாகவே தெரிவித்தனர்.என்று கூறியுள்ளார் .காஷ்மீர் மக்கள் பெரும்பாலானோர் அமைதியாக வாழவே விரும்புகின்றனர் ,ஒருசில பிரிவினைவாத (தீவிரவாத )இயக்கங்கள் மட்டுமே அமைதியை சீர்குலைத்து வருகின்றனர் என்பதுதான் உண்மை ,அமைதியை சீர்குலைப்பது அவர்கள் மட்டும் தான?திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகளுக்கே அதிக பங்கு.

இது ஒருபுறம் என்றல் , மதத்தின் பெயரால் எங்கள் அமைதியை கெடுக்கும் அன்னியரின் பங்கு இன்னொருபுறம் .
(காஷ்மீர் போராட்டத்தை ஆதரியுங்கள்-முஸ்லீம்களுக்கு ஈரான் மதத் தலைவர் அழைப்பு)

உலகெங்கும் உள்ள முஸ்லீம் அறிஞர்கள், காஷ்மீரில் நடந்து வரும் போராட்டத்திற்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும் என ஈரான் நாட்டின் மதத் தலைவரான அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார்.மேலும் காஷ்மீரை தனி நாடு போலவும் அவர் வர்ணித்துள்ளார்.

எவரொருவரின் சூட்சியும் எங்கள் சகோதரதத்துவத்தின் முன் எடுபடாது

நாங்கள் இந்தியர் என்னும் வலிமையான சங்கிலியால் இணைக்கப்பட்டுள்ளோம் என்பதற்கு சமிபத்தில் வெளியான பாபர் மசூதி வழக்கின் இறுதி தீர்ப்பே சாட்சி .

No comments:

Post a Comment