காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலத்துடன் மொத்தம் 101 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது.
இது ஒரு புறம் மகிட்சி என்றாலும் , போட்டி தொடங்கும் முன்பே
சர்ச்சைகள், சந்தேகங்கள்,தொடங்கிவிட்டன .
விளையாட்டு அரங்கங்கள் தயாராகவில்லை, தயாரானவையும் நல்ல தரத்தில் இல்லை; விளையாட்டு கிராமத்தைச் சுற்றி மழை நீர் தேங்கி நிற்கிறது; கொசுக்கடி தாளவில்லை; நடைமேம்பாலம் இடிந்து விழுந்துவிட்டது; விளையாட்டு அரங்கின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துவிட்டது; விளையாட்டு வீரர்களுக்கான குடியிருப்பில் உள்ள கட்டில்களில் தெரு நாய்கள் படுத்து உறங்குகின்றன என்று ஏகப்பட்ட புகார்கள், இவ்வாறெல்லாம் இந்தியாவை வெளிவுலகிற்கு சிலர் அடையாளம் காண்பித்தாலும் ,நம்முடைய விளையாட்டு வீரர்களின் திறமையையும் , பாராட்டாமல் இருக்கவே முடியாது.
என்னை பொறுத்தவரை இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்பது
இந்தியாவிற்கு சிறப்பான வெற்றி ......
குறுகிய காலத்தில் சர்வதேச தரத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஆற்றல் இந்தியாவுக்கு இருக்கிறது என்பது உணர்த்தப்பட்டிருக்கிறது என்றால்மகிழ்சி.... இது ஒரு புறம் இருக்க ,இந்தப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வாங்கிக் குவிக்கும் திறமை நம்முடைய வீரர்களுக்கு இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
2003-ல் காமன்வெல்த் போட்டியை தில்லியில் நடத்த சம்மதம் தெரிவித்த பிறகும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய அமைச்சரவைக் குழு 2008 வரை உறக்கத்தில் இருந்தது வருந்ததக்கது .......
எதிர் காலத்தில் எதனை தவிர்த்தால் எம்மை இவ்வுலகம் திரும்பிபார்க்கும்
என்பதில் ஐயம் இல்லை .
No comments:
Post a Comment