வாழ்வின் வசந்தத்தை தேடி......................
துன்பம் என்னை பின் துறத்த
சங்கடங்கல் இருந்த போதும்
சத்தியத்தின் வழி நடந்தேன்,
...
வெற்றி பாதை தேடி வேகமாய்
சென்ற போது.......
தோழி ஒருத்தியின் குறள் கேட்க,
தடைபட்டது நடைபயணம்.
துனைசேர்ந்த தோழியின்
தோள் சாயந்து இளைப்பாற,
கண் மூடிய கண நேரத்தில்
கண் கட்டி,கரம் பற்றி....
காட்டு வழி கூட்டி சென்றாள்,
ஓணாய்கலின் ஓலம் கேட்டு உடனே--கண்விழிக்க
தாமதமாய் நானுனர்ந்தேன்
தவறான வழி இதென்று.
மாயமாய் மறைந்து போனாள்
மாய்ந்து "போ" என்று கூறி
உன் சூட்சியில் விழுந்ததனால்
செத்தொழிந்து போவேனோ?
தர்மத்தின் வழி நிற்க்கும்,
மானிடற்க்கு மரணம் ஏது?
தோல்விகலின் தூரத்தல்களால்
தொடர்கிறது என்பயணம்
கணவுகல் புதைத்துவிட்டு
கடல் தாண்டி வந்த பின்பு,
ஏழ்மையை வென்று விட்டேன்
இளமையை இழந்து விட்டேன்,
இருப்பினும் தேடல் முடியவில்லை
அன்பை போழியும் அம்மா
பாசம் காட்டும் தங்கை.....
தோள் கொடுக்கும் தோழன்,
இவை அனைத்தும் இழந்த பிறகு-இங்கு
எதைத்தான் தேடுகிறேனோ............?
ஓட்டம் தோடர்கிறது............
ஓடினேண் ஓடினேன் வெற்றி வெகுதூரமில்லை,
என்ற வீரிய என்னத்தோடு
ஓடிவந்த பாதையினை ஒரு நிமிடம் திரும்பி பார்த்தால்
எஞ்சியது என்வோ ஏக்கம் மட்டும் தான்
ஏக்கத்தின் இயல்பிலேயே-தொடர்கிறது
என் பயணம்-இம்முறை
வாழ்வின் வசந்தத்தை தேடி......................